பாமாசா விளையாட்டரங்கம்
Appearance
அமைவிடம் | மீரட், உத்தரப் பிரதேசம் |
---|---|
உருவாக்கம் | 2003 |
இருக்கைகள் | 4,500 |
உரிமையாளர் | மீரட் மாவட்ட துடுப்பாட்ட சங்கம் |
இயக்குநர் | உத்தரப்பிரதேச துடுப்பாட்ட சங்கம் |
குத்தகையாளர் | உத்தரப்பிரதேச துடுப்பாட்ட அணி |
மூலம்: Cricinfo |
பாமாசா விளையாட்டரங்கம் (Bhamashah Stadium) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மீரட் நகரில் அமைந்துள்ள துடுப்பாட்ட விளையாட்டரங்கமாகும். 2003 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச துடுப்பாட்ட அணி பஞ்சாப் துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடிய போது போட்டி சமநிலையில் முடிவடைந்தது.[1] [2] அப்போது முதல் நவம்பர் 2013 வரை உத்தரப் பிரதேச துடுப்பாட்ட அணிக்காக ஐந்து போட்டிகள் இங்கு நடைபெற்றுள்ளன. கருநாடகா துடுப்பாட்ட அணிக்கும் சொந்த அணியான உத்தரப்பிரதேச துடுப்பாட்ட அணிக்கும் இடையேயான போட்டியில் மனீசு பாண்டே 194 ஓட்டங்கள் எடுத்தார்.[3] உள்நாட்டு துடுப்பாட்ட அரங்கமான இந்த விளையாட்டரங்கம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பிரவீன் குமார் மற்றும் புவனேசுவர் குமார் ஆகியோருக்கு சொந்த மண்ணில் உள்ள விளையாட்டரங்கமாகத் திகழ்கிறது.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ First-class Matches
- ↑ Scorecard
- ↑ Uttar Pradesh v Karnataka
- ↑ "Praveen, Bhuvneshwar and Meerut's ascent". Archived from the original on 23 August 2015. பார்க்கப்பட்ட நாள் 27 August 2015.
- ↑ A role model to the core!